< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
ஓசூரில்வாகனம் மோதி தொழிலாளி சாவு
|17 April 2023 12:30 AM IST
ஓசூர்:
ஓசூரில் வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.
கூலித்தொழிலாளி
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சின்ன முதலைப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் கணேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
விசாரணை
இதில் பலத்த காயம் அடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.