< Back
மாநில செய்திகள்
கார் மோதி முதியவர் பலி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கார் மோதி முதியவர் பலி

தினத்தந்தி
|
12 April 2023 12:30 AM IST

குருபரப்பள்ளி:

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பாலேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் எட்டியப்பன் (வயது 70). இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூருவுக்கு காரில் சென்று மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுபேதார் மேடு என்னும் இடத்தில் டீ குடிப்பதற்காக காரை நிறுத்தினார். அப்போது எட்டியப்பன் சாலையோரம் நின்று டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எட்டியப்பன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த எட்டியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து அறிந்ததும் மகராஜகடை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்