< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து தி.மு.க. நிர்வாகி சாவு
தர்மபுரி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து தி.மு.க. நிர்வாகி சாவு

தினத்தந்தி
|
9 April 2023 12:30 AM IST

அரூர்:

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கோட்டப்பட்டி அருகே சேலூர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் மாதையன் (வயது 38). தி.மு.க. கிளை செயலாளர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மகன் தீபக்குடன் மோட்டார் சைக்கிளில் தும்பல் நோக்கி சென்றார். அப்போது சேலூர் அம்மாபாளையம் பிரிவு சாலை காட்டுப்பகுதியில் சென்றபோது காட்டெருமை ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் மாதையன் பலத்த காயம் அடைந்து இறந்தார். தீபக் லேசான காயம் அடைந்தார். இதுகுறித்து மாதையனின் மனைவி கவிதா கொடுத்த புகாரின்பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்