< Back
மாநில செய்திகள்
கொல்லிமலையில் நடந்த விபத்தில்மேலும் ஒரு பள்ளி மாணவர் சிகிச்சை பலனின்றி சாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

கொல்லிமலையில் நடந்த விபத்தில்மேலும் ஒரு பள்ளி மாணவர் சிகிச்சை பலனின்றி சாவு

தினத்தந்தி
|
11 Feb 2023 12:30 AM IST

சேந்தமங்கலம்:

கொல்லிமலையில் உள்ள தின்னனூர் நாடு ஊராட்சி சோளக்கன்னி பட்டியை சேர்ந்த ரஜினி மகன் அகிலன் (வயது 17). செம்மேட்டில் உள்ள ஜி.டி.ஆர். அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். இவருடைய நண்பனான வாழவந்தி நாடு பெருமபட்டியை சேர்ந்த வசந்த் (17) அந்த பள்ளியில் படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சோளக்காட்டில் இருந்து செம்மேடு நோக்கி சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளும் எதிரே காரும் நேருக்கு நேராக மோதியதில் அகிலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வசந்த் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தான். அவனை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வசந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு வசந்த் பரிதாபமாக இறந்தார்.

மேலும் செய்திகள்