< Back
மாநில செய்திகள்
பர்கூர் அருகேமோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பர்கூர் அருகேமோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
2 Feb 2023 12:15 AM IST

பர்கூர்:

பர்கூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.

கூலித்தொழிலாளி

பர்கூர் அடுத்த கெம்பிநாயன பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராம்தாஸ் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் வரட்டன பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது சின்ன மட்டாரப்பள்ளி என்ற இடத்தில் வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் மோதியது.

விசாரணை

இதில் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த ராம்தாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கந்திகுப்பம் போலீசார் ராமதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்