< Back
மாநில செய்திகள்
பென்னாகரம் அருகேபுரோட்டா மாஸ்டர் மர்மசாவுபோலீசார் விசாரணை
தர்மபுரி
மாநில செய்திகள்

பென்னாகரம் அருகேபுரோட்டா மாஸ்டர் மர்மசாவுபோலீசார் விசாரணை

தினத்தந்தி
|
30 Jan 2023 12:15 AM IST

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே புரோட்டா மாஸ்டர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புரோட்டர் மாஸ்டர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மடம் கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன். இவருடைய மகன் கணேசன் (வயது 45). ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணேசன் தனது உறவினர்களுடன் சேர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வீட்டிற்கு செல்லாமல் வெளியில் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே நேற்று காலை கணேசன் தனது வீட்டின் முன் பின் தலையில் ரத்தக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் விசாரணை நடத்தினார். இதையடுத்து ஒகேனக்கல் போலீசார் கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக கணேசனின் தாயார் ருக்கு ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உறவினர்களுடன் மது குடித்த கணேசன் வீட்டுக்கு செல்லாமல் போதையில் சுற்றித்திரிந்ததும், அப்போது போதையில் கால் தவறி கல்லில் விழுந்து பின் தலையில் படுகாயம் அடைந்து இறந்ததாகவும் தெரியவந்துள்ளது. எனினும் போலீசார் கணேசனின் மர்மசாவு குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்