< Back
தமிழக செய்திகள்
காரிமங்கலம் அருகே  மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
தர்மபுரி
தமிழக செய்திகள்

காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
11 Dec 2022 12:15 AM IST

காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

மின்சாரம் தாக்கியது

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 24). திருமணமாகவில்லை. இவர் காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

அங்கு பழைய இரும்பை உருக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர் அங்கு வழக்கம் போல் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.

போலீசார் விசாரணை

இதை பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்தது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்