< Back
மாநில செய்திகள்
பர்கூர் அருகே  கிரானைட் கல் விழுந்து தொழிலாளி சாவு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பர்கூர் அருகே கிரானைட் கல் விழுந்து தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
28 Oct 2022 12:15 AM IST

பர்கூர் அருகே கிரானைட் கல் விழுந்து தொழிலாளி சாவு

பர்கூர்:

பர்கூர் அருகே அச்சமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கிரானைட் தொழிற்சாலையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குமார் பத்ரன் (வயது 21) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கிரானைட் கற்களை அறுக்க கொண்டு சென்றபோது எதிர்பாராதவிதமாக கல் அவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து சென்ற கந்திகுப்பம் போலீசார் குமார் பத்ரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்