< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
பர்கூர் அருகே வாகனம் மோதி ஜோதிடர் பலி
|23 Oct 2022 12:15 AM IST
பர்கூர் அருகே வாகனம் மோதி ஜோதிடர் பலி
பர்கூர்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள வேலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 54). ஜோதிடர். இவர் சொந்த வேலை காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல் நத்தம் செல்ல பர்கூர் அருகே சென்னை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனம் கிருஷ்ணன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பர்கூர் போலீசார் கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.