< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
தேன்கனிக்கோட்டையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
|9 Sept 2022 11:24 PM IST
தேன்கனிக்கோட்டையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நாகசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணப்பா (வயது 50). இவர் அதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணா ரெட்டி என்பவரது விவசாய தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, பிள்ளைகள் யாரும் இல்லாததால் கிராமத்தில் ஆங்காங்கே தங்கி வாழ்ந்து வந்தார். நாராயணப்பாவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு நாகசந்திரம் கிராமத்தில் உள்ள ஒரு பாலத்தின் தடுப்புச்சுவர் மீது அமர்ந்திருந்தார். அப்போது அவர் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தாா. இதில் பலத்த காயமடைந்த அவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.