< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
பாகலூர் அருகே கிரஷர் எந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி பலி
|8 Sept 2022 11:33 PM IST
பாகலூர் அருகே கிரஷர் எந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி பலி
ஓசூர்:
ஓசூர் பக்கமுள்ள பாகலூர் அருகே வெங்கடேசபுரத்தில், உள்ள கிரஷரில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தர்மேந்திரா (வயது 20) என்ற தொழிலாளி பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கை, எந்திர பெல்ட்டில் சிக்கி வலியால் அலறி துடித்தார்.
இதையடுத்து அவரை சக தொழிலாளர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தர்மேந்திரா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.