< Back
மாநில செய்திகள்
நாமகிரிப்பேட்டையில்  மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி  வாலிபர் கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமகிரிப்பேட்டையில் மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி வாலிபர் கைது

தினத்தந்தி
|
5 Sept 2022 11:24 PM IST

நாமகிரிப்பேட்டையில் மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார். வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டையில் மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார். வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அ.தி.மு.க. தீவிர தொண்டர்

நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குருசாமி ஆசாரி மகன் மணி என்ற சுப்பிரமணியம் (வயது 56). திருமணமாகாத இவர் அ.தி.மு.க. தீவிர தொண்டராகவும், கூட்டுறவு சங்கத்தில் தற்காலிகமாக எடை போடும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று சுப்பிரமணியம் தனது மொபட்டில் நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நாமகிரிப்பேட்டை அருேக உள்ள காட்டூர் பகுதியை சேர்ந்த குருசந்திரன் (24) என்பவர் மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்தார். அந்த சமயம் கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிள் சுப்பிரமணியம் ஓட்டி சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது.

கைது

இதில் தூக்கி வீசப்பட்டு சுப்பிரமணியம் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். குருசந்திரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நாமகிரிப்பேட்டை போலீசார் படுகாயம் அடைந்த சுப்பிரமணியத்தை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுப்பிரமணியம் இறந்தார். இதையடு்த்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து குருசந்திரனை கைது செய்தார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்