< Back
தமிழக செய்திகள்
மணியனூரில், சாலையை கடக்க முயன்றபோது  கார் மோதி பெண் பலி
நாமக்கல்
தமிழக செய்திகள்

மணியனூரில், சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பெண் பலி

தினத்தந்தி
|
5 Sept 2022 10:58 PM IST

மணியனூரில், சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பெண் பலி

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூர் பஸ் நிறுத்தம் வையப்பமலை மலைக்காவல் அம்மன் தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 55). இவர்களுடைய மகளை மணியனூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்த நிலையில் செல்லம்மாள் மகளை பார்த்துவிட்டு திரும்பி வந்தார்.

அப்போது மணியனூர் பஸ் நிறுத்தம் அருகே தார்சாலையை கடக்க முயன்றபோது திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி அண்ணா நகரை சேர்ந்த ஜேம்ஸ் அலெக்ஸ்சாண்டர் (31) என்பவர் ஓட்டி வந்த கார் செல்லம்மாள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த செல்லம்மாள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து சென்ற நல்லூர் போலீசார் செல்லம்மாளின் உடலை ைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்