< Back
மாநில செய்திகள்
பெரியாம்பட்டி அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு
தர்மபுரி
மாநில செய்திகள்

பெரியாம்பட்டி அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு

தினத்தந்தி
|
27 Oct 2023 12:30 AM IST

பெரியாம்பட்டி அருகே ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் இறந்தார்.

காரிமங்கலம்:

பெரியாம்பட்டி அருகே ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் இறந்தார்.

வாலிபர்

காரிமங்கலம் அருகே பெத்தனூர் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் மகன் சிலம்பரசன் (வயது 19). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று மாலை ஆடு மேய்த்து வருவதாக கூறி ஆடுகளை அழைத்து சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை, நீண்ட நேரமாகியும் வராததால் ஆடு மேய்க்க சென்ற இடங்களில் உறவினர்கள் தேடி சென்று பார்த்தனர்.

அப்போது பெரியாம்பட்டி அடுத்த பூலாப்பட்டி ஆற்றின் அருகே ஆடுகள் மட்டும் மேய்ந்து கொண்டிருந்தன. பின்னர் ஆற்றில் சென்று பார்த்தபோது சிலம்பரசன் இறந்த நிலையில் மிதந்தார். இதுகுறித்து உடனடியாக காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சிலம்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் குளிக்கும் போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் விசாரனையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆற்றில் குளிக்க சென்றபோது வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்