< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி2 பேர் காயம்
|7 Oct 2023 12:30 AM IST
சூளகிரி:
சூளகிரி அருகே ஏனுசோனை கூலியம் கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 27). இவரும் வாசு, ஜீவன் ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் சூளகிரி- ராயக்கோட்டை சாலையில் உலகம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்து நாகேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். வாசு, ஜீவன் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.