< Back
மாநில செய்திகள்
பாம்பு கடித்து சில்லி கடைக்காரர் சாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

பாம்பு கடித்து சில்லி கடைக்காரர் சாவு

தினத்தந்தி
|
23 Sept 2023 12:30 AM IST

மோகனூர்:

மோகனூர் அருகே வளையப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 52). இவர் பெரிய பாலம் அருகே சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சில்லிக்கடையில் உள்ள குப்பைகளை கூட்டி அள்ளிக்கொண்டு அருகே உள்ள பகுதியில் கொட்ட சென்றார். அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று விஜயகுமாரை கடித்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் நேற்று காலை இறந்தார். இதுகுறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்