< Back
மாநில செய்திகள்
பாம்பு கடித்து விவசாயி சாவு
தர்மபுரி
மாநில செய்திகள்

பாம்பு கடித்து விவசாயி சாவு

தினத்தந்தி
|
5 Aug 2023 12:30 AM IST

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே உள்ள எச்சனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன் (வயது 61). விவசாயி. இவர் பண்டஅள்ளி கிராமத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையை பார்வையிட சென்றார். அங்கு அவர் நடந்து சென்றபோது சருகில் மறைந்திருந்த பாம்பு அவரது காலில் கடித்தது. இதனால் வலியால் துடித்த அவரை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சின்னபையன் நேற்று இறந்தார். இதுகுறித்து இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்