< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் பறிமுதல் - வாலிபர் கைது
|9 Feb 2024 7:30 PM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைரக்கற்களை கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு வைரக்கற்கள் கடத்தப்பட இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்திய அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் தாய்லாந்து செல்ல வந்த சென்னையை சேர்ந்த 30 வயது வாலிபரின் உடைமைகளை சோதனை செய்தனர்.
அந்த வாலிபரின் சூட்கேசை சோதனை செய்தபோது அதில் ரகசிய அறைகள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது வைரக்கற்கள் அதிகமாக இருந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் 2 கோடியே 33 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1004 கேரட் வைரக்கற்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, வாலிபரை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.