< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் பறிமுதல்
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
9 Feb 2024 3:04 PM IST

வைரக்கற்களை கடத்த முயன்ற நபரை கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்திற்கு செல்லும் பயணி ஒருவர் பெரும் அளவில் வைரக்கற்கள் கடத்தி செல்வதாக சென்னை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், விமான நிலையத்தில் பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது தாய்லாந்திற்கு செல்லும் பயணி ஜாவித் அகமது காதர் மைதீன் என்பவரின் சூட்கேசில் வைரக்கற்கள் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. அந்த சூட்கேசில் இருந்து சுமார் 1,004 காரட் எடையுள்ள ரூ.2.33 கோடி மதிப்பிலான வைரக்கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக ஜாவித்தை கைது செய்த அதிகாரிகள், இந்த வைரக்கற்கள் கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்