< Back
மாநில செய்திகள்
அமுதம் அங்காடிகளில் இன்று முதல் துவரம் பருப்பு விற்பனை..!
மாநில செய்திகள்

அமுதம் அங்காடிகளில் இன்று முதல் துவரம் பருப்பு விற்பனை..!

தினத்தந்தி
|
14 July 2023 8:24 AM IST

அமுதம் அங்காடிகளில் இன்று முதல் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் தக்காளி ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சென்னையில் உள்ள 14 அமுதம் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் தக்காளி உள்பட அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் விலைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி தக்காளி ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பு 500 கிராம் ரூ.75க்கும், உளுத்தம் பருப்பு 500 கிராம் ரூ.60க்கும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி உணவுத்துறை சார்பில் கொள்முதல் விலைக்கு அத்தியாவசிய பொருள்களை விற்க முடிவு செய்யப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்