< Back
மாநில செய்திகள்
இ-டெண்டர் முறையில் பணியாளர்கள் நியமிப்பதை ரத்து செய்யக்கோரி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

இ-டெண்டர் முறையில் பணியாளர்கள் நியமிப்பதை ரத்து செய்யக்கோரி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்

தினத்தந்தி
|
21 Oct 2023 12:59 AM IST

இ-டெண்டர் முறையில் பணியாளர்கள் நியமிப்பதை ரத்து செய்யக்கோரி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் நேற்று விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு திட்ட சிறப்புத்தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி, திட்ட செயலாளர் சேகர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.

கோரிக்கைகள்

மின்வாரியத்தில் ஒப்பந்தத்திற்கு மாறாக இ-டெண்டர் முறையில் பணியாளர்களை நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும், இ-டெண்டரை ரத்து செய்து மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

இதில் திட்ட நிர்வாகிகள் புருஷோத்தமன், ஏழுமலை, அய்யப்பன், வெங்கடகிருஷ்ணன், பெருமாள், கன்னியப்பன், மைக்கேல், முருகானந்தம், வீரமுத்து, சங்கர், ஞானவேலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி நிறைவுரையாற்றினார். முடிவில் கோட்ட செயலாளர் அருள் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்