< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
தர்ணா போராட்டம்
|8 May 2023 1:39 AM IST
பணகுடி அருகே தர்ணா போராட்டம் நடந்தது.
பணகுடி:
பணகுடி அருகே ரோஸ்மியாபுரத்தில் தனியார் முதியோர் காப்பகம் உள்ளது. இதன் நிர்வாகத்தை சிலர் முறைகேடாக கைப்பற்றியதாகவும், அங்குள்ள முதியவர்களை சரிவர பராமரிக்கவில்லை என்றும், அவர்களை பார்ப்பதற்கு உறவினர்களை அனுமதிக்கவில்லை என்றும் கூறி, முதியோர் காப்பகம் முன்பாக அப்பகுதியினர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள், இதுதொடர்பாக சமூக நலத்துறையிடம் புகார் அளிக்க சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.