< Back
மாநில செய்திகள்
மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா
திருவாரூர்
மாநில செய்திகள்

மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா

தினத்தந்தி
|
21 Oct 2023 12:15 AM IST

திருவாரூரில், மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

மின்வாரியத்தில் இ-டெண்டர் முறை பணிகளில் வெளி தொழிலாளர்களை கொண்டு பணிகளை மேற்கொள்வதை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று திருவாரூர் துர்க்காலயா ரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு அமைப்பின் திட்ட துணைத்தலைவர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், அமைப்பின் மாநில செயலாளர் ராஜாராமன், திட்ட செயலாளர் ராஜேந்திரன், திட்ட தலைவர் சகாயராஜ், கோட்ட தலைவர் குமார், திட்ட பொருளாளர் முகேஷ், கோட்ட செயலாளர்கள் வீரபாண்டியன், வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்