ராமநாதபுரம்
முதுகுளத்தூர் யூனியன் தலைவர் பதவியை ராஜினாமா செய்த தர்மர்
|அ.தி.மு.க. சார்பில் டெல்லி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதால் முதுகுளத்தூர் யூனியன் தலைவர் பதவியை தர்மர் ராஜினாமா செய்தார்.
ராமநாதபுரம்,
அ.தி.மு.க. சார்பில் டெல்லி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதால் முதுகுளத்தூர் யூனியன் தலைவர் பதவியை தர்மர் ராஜினாமா செய்தார்.
அ.தி.மு.க. சார்பில்...
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்து வந்தவர் தர்மர். அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளரான இவர், தற்போது கட்சி சார்பில் டெல்லி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் வருகிற 31-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட உள்ளதால் தர்மர் தனது முதுகுளத்தூர் யூனியன் 11-வது வார்டு கவுன்சிலர் பதவி, மற்றும் யூனியன் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடிதம் கொடுத்தார்
இதையொட்டி நேற்று காலை முன்னாள் பரமக்குடி எம்.எல்.ஏ. சதன்பிரபாகரன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தார். மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசனை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வருகிற 31-ந் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதால் தனது கவுன்சிலர் பதவி மற்றும் யூனியன் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.