< Back
மாநில செய்திகள்
தருமபுரி: பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததாக புகார்
மாநில செய்திகள்

தருமபுரி: பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததாக புகார்

தினத்தந்தி
|
21 Sept 2023 4:39 PM IST

மாணவர்கள் குடிக்கும் தண்ணீரில் கலந்திருந்தது மனிதக்கழிவா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அரசு பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியின் குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் ஆசிரியரிடம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, ஆசிரியர்கள் குடிநீர் தொட்டியை சோதனை செய்தனர். அப்போது அதில் அசுத்தம் கலந்து இருந்தது தெரியவந்தது. பின்னர், உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், வட்டார கல்வி அலுவலர் மற்றும் போலீசார் பள்ளிக்கு சென்று குடிநீர் தொட்டியை ஆய்வுசெய்து வருகின்றனர். மாணவர்கள் குடிக்கும் தண்ணீரில் கலந்திருந்தது மனிதக்கழிவா, அல்லது குரங்கு உள்ளிட்ட வேறு ஏதேனும் விலங்குகளின் கழிவா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்