< Back
மாநில செய்திகள்
தர்மபுரி: பள்ளி வகுப்பறையில் சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மயக்கமடைந்த 6 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
மாநில செய்திகள்

தர்மபுரி: பள்ளி வகுப்பறையில் சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மயக்கமடைந்த 6 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
17 March 2023 12:17 PM IST

மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பள்ளிப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில், வகுப்பறை அலமாரியில் இருந்த சத்து மாத்திரைகளை மாணவிகள் எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் 6-ம் வகுப்பு படிக்கும் 6 மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டதையடுத்து, 5 மாணவிகள் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையிலும், ஒரு மாணவி தர்மபுரி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். மாணவிகளின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்