< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தர்மபுரி: மின்சாரம் பாய்ந்து தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழப்பு
|11 Aug 2023 9:23 AM IST
தர்மபுரியில் மின்சாரம் பாய்ந்து தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் மின்சாரம் பாய்ந்து தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரிமங்கலம் அருகே ஓடைச்சக்ரை பகுதியில் வீட்டின் அருகே துணிகள் உலர்த்தும் கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில், தாய் மாதம்மாள் (60) காப்பாற்றச் சென்ற அவரது மகன் பெருமாள் (33) மற்றும் உறவினர் சரோஜா (60) என மூவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
கனமழை பெய்ததால் மின் கம்பி அறுந்து விழுந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 3 பேரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரியில் மின்சாரம் பாய்ந்து தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.