< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
தல்லாகுளம் பெருமாள் கோவில் உண்டியல் திறப்பு-ரூ.4½ லட்சம் காணிக்கையாக கிடைத்தது
|23 Jun 2023 6:00 AM IST
தல்லாகுளம் பெருமாள் கோவில் உண்டியல் திறப்பு நிகழ்வில் ரூ.4½ லட்சம் காணிக்கையாக கிடைத்தது
அழகர்கோவில்,
கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலின் உண்டியல்கள் கோவில் வளாகத்தில் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.4 லட்சத்து 51 ஆயிரத்து 875, தங்கம் 14 கிராம், வெள்ளி 35 கிராமும், ெவளிநாட்டு டாலர் நோட்டுகளும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டு கிடைக்கப்பெற்றது. உண்டியல் திறப்பின் போது கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் துணை ஆணையர் சுரேஷ், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, ஆய்வாளர் ஜெய லட்சுமி, கண்காணிப்பாளர்கள் அருட்செல்வன், பிரதீபா, கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.