< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை ஐ.சி.எப் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு..!
|2 April 2023 3:24 PM IST
சென்னை ஐ.சி.எப் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.
சென்னை,
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னை ஐ.சி.எப் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு இன்று நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது பதிவேடுகளையும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். அதன் பின்னர் காவல் நிலைய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி சிறப்பாக பணிபுரிந்த காவலர்களை பாராட்டி ரொக்கப் பரிசு வழங்கினார்.
பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்து அவர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலைய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.