< Back
மாநில செய்திகள்
டி.ஜி.பி. அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ரூ.1½ கோடி சொத்துகளை மீட்டுத்தர கோரிக்கை
சென்னை
மாநில செய்திகள்

டி.ஜி.பி. அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ரூ.1½ கோடி சொத்துகளை மீட்டுத்தர கோரிக்கை

தினத்தந்தி
|
13 July 2023 1:32 PM IST

தனது குடும்பத்தினருடன் சென்னை டி.ஜி.பி. அலுவலகம் வந்து, வாசலில் நின்று கொண்டு தனது குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது .

திருப்பூர் மாவட்டம், மரவபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 56). இவர் நேற்றுதனது குடும்பத்தினருடன் சென்னை டி.ஜி.பி. அலுவலகம் வந்து, வாசலில் நின்று கொண்டு தனது குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவலுக்கு நின்ற போலீசார், தீக்குளிக்க விடாமல் அவர்களை காப்பாற்றினார்கள். பின்னர் மணியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவருக்கு சொந்தமான ரூ.1½ கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரும், அவரது ஆட்களும் சேர்ந்து அபகரித்து கொண்டதாகவும், அதை மீட்டுத்தர போலீசில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், 3 வருடமாக நடத்தி வரும் போராட்டத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பினனர் அவர் டி.ஜி.பி. அலுவலக வாசல் முன் உட்கார்ந்து குடும்பத்தினருடன் மறியல் போராட்டம் நடத்தினார். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுத்தனர். அதன்பின்னர் அவர் போராட்டத்தை முடித்துக்கொண்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்