< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை
|19 Aug 2023 2:15 AM IST
பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை
வால்பாறை
வால்பாறை, முடீஸ், சோலையாறு நகரில் உள்ள சுகாதார நிலையங்கள் சார்பில் உலக குடற்புழு நீக்க தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி குடற்புழு தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் நல்லகாத்து எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ரஞ்சித் குமார் தலைமையில் வால்பாறை சுகாதார நிலைய டாக்டர்கள் சாமிநாதன், உதயன் ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் பகுதி சுகாதார செவிலியர் தேவகி, கிராம சுகாதார செவிலியர் சசி மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளர்கள் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கினார்கள்.