< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
அரசு பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை
|10 Sept 2022 12:55 AM IST
எருமப்பட்டியில் அரசு பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.
எருமப்பட்டி
எருமப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு எருமப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையின் சார்பில் மாணவிகளுக்கு கை கழுவுவதின் முக்கியத்துவம், ஈமொய்த பண்டங்களை உண்ணாமல் இருப்பது, சத்தான உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதின் முக்கியத்தும் குறித்து எருமப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார மருத்துவர் லலிதா எடுத்துரைத்தார். பின்னர் மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வடிவேல், எருமப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் ரவி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர், பாலமுரளி, பாபு கிராம சுகாதார செவிலியர் ஜெயக்கொடி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.