< Back
மாநில செய்திகள்
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

தினத்தந்தி
|
16 Aug 2023 11:21 PM IST

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் முதல் கட்டமாக இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதுதொடர்பாக கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்த சிறப்பு முகாமில் 1 முதல் 19 வயதில் அனைத்து குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கும், 20 முதல் 30 வயதில் பெண்களுக்கும், குடற்புழு நீக்க மாத்திரை (அல்பென்டசோல்) ஒரே நாளில் வழங்கப்படுகிறது. 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 6 முதல் 19 வயது வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு வீடுவீடாக சென்று குடற்புழு மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் களையப்பட்டு, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் மாணவர்களின் கல்வித்திறன் மேம்படும். அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 590 குழந்தைகள் மற்றும் மாணவர்கள், 45 ஆயிரத்து 34 பெண்கள் பயன் அடைவார்கள். இன்று (வியாழக்கிழமை) மாத்திரை உட்கொள்ளாமல் விடுபட்ட குழந்தைகளுக்கு 2-வது கட்டமாக வருகிற 24-ந் தேதி முகாம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்