< Back
மாநில செய்திகள்
சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு அலகு குத்தி சென்ற பக்தர்கள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு அலகு குத்தி சென்ற பக்தர்கள்

தினத்தந்தி
|
5 March 2023 6:31 PM IST

சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு அலகு குத்தி சென்ற பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணியில் உள்ள தமிழர் காலனியை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தையொட்டி அலகு குத்திக் கொண்டும், வேல் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்து கொண்டும், பால் குடங்களை சுமந்து கொண்டும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபடுவர். இந்நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள் 31-ம் ஆண்டாக பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு அழகு குத்திக் கொண்டும், காவடிகளை சுமந்து கொண்டும் முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா! என்று கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று வேண்டுதலை நிறைவேற்றினர். முன்னதாக ஆரணி தமிழர் காலனியில் உள்ள கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், விளக்கு பூஜை மற்றும் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முருக பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்