< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்
|25 May 2022 12:13 AM IST
பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்
சாயல்குடி
கடலாடி பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழா நடைபெற்றது. கடலாடி சத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 251 பால்குடம் எடுத்து வந்தனர். இதைதொடர்ந்து பத்தரகாளியம்மன், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடலாடி, சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.