< Back
மாநில செய்திகள்
பால்குடம் எடுத்த பக்தர்கள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பால்குடம் எடுத்த பக்தர்கள்

தினத்தந்தி
|
5 Aug 2023 12:15 AM IST

பால்குடம் பக்தர்கள் எடுத்தனர்.

சாயல்குடி,

சாயல்குடியில் வணிக வைசிய உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சக்தி மாரியம்மன் கோவில் ஆடி பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் தலைமை தாங்கினார். சாயல்குடி ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன், சாயல்குடி பேரூராட்சி சேர்மன் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதளுடன் நிகழ்ச்சி ெதாடங்கியது. தொடர்ந்து காலை அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் கடற்கரை சென்று தீர்த்தம் எடுத்து பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி, அழகுவேல் பூட்டி நகர்வலம் வந்து பூக்குழி இறங்கினர். தொடர்ந்து அம்மனுக்கு 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சாயல்குடி வணிக வைசிய உறவின் முறையாளர்கள் மற்றும் வணிக வைசிய இளைஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்