< Back
மாநில செய்திகள்
சாமிதோப்புக்கு பக்தர்கள் பாதயாத்திரை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

சாமிதோப்புக்கு பக்தர்கள் பாதயாத்திரை

தினத்தந்தி
|
3 Jun 2022 12:43 AM IST

அடையகருங்குளத்தில் இருந்து சாமிதோப்புக்கு பக்தர்கள் பாதயாத்திரை புறப்பட்டுச் சென்றனர்.

விக்கிரமசிங்கபுரம்:

அடையகருங்குளத்தில் இருந்து ஆண்டுதோறும் சாமிதோப்புக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அடையகருங்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் இருந்து பாதயாத்திரை குழு தலைவர் ஆதிநாராயணன், செயலாளர் முத்தையா, பொருளாளர் மூக்கன், பொறுப்பாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் விக்கிரமசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதியான முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, பூவன்குறிச்சி, ஆறுமுகம்பட்டி, வெயிலு முத்தன்பட்டி, புலவன்பட்டி, அகஸ்தியர்பட்டி, கொண்டபையன் பட்டி, கட்டபுளத்தெரு, கஸ்பா செட்டிமேடு ஆகிய ஊர்களில் இருந்து சாமிதோப்புக்கு மாலை அணிந்து புறப்பட்டனர். ஏற்பாடுகளை கிருஷ்ணன் என்ற பாண்டி, துளசிராம்சிங், மாயாண்டி ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்