< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆடிமாதம் தொடங்கியதை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
|17 July 2022 5:20 PM IST
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிமாதம் தொடங்கியதை முன்னிட்டு திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி,
ஆடிமாதம் தொடங்கியதை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலுக்கு இன்று காவடி எடுத்து வந்தனர்.
முன்னதாக மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை திருக்குளத்தில் அருகே சூடம் ஏற்றி வழிப்பட்டு பின்னர் படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு்சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம் தொடங்கிய முதல் நாளே மலைக்கோவில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் பொதுவழியில் ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.
வரும் 23-ந் தேதி ஆடிக்கிருத்தை திருவிழா மற்றும் தெப்பத் திருவிழான்று லட்சகணக்காண பக்தர்கள் முருகனை வழிப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.