< Back
மாநில செய்திகள்
சித்திரை மாத கிருத்திகை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

சித்திரை மாத கிருத்திகை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

தினத்தந்தி
|
23 April 2023 1:59 PM IST

சித்திரை மாத கிருத்திகை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான முருகன் கோவில் மலைமேல் உள்ளது. இந்த திருக்கோவிலில் நேற்று சித்திரை மாத கிருத்திகை தினத்தையொட்டி மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு பால், தயிர், பழம், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், இளநீர், போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு ஆராதனைக்கு பிறகு தங்க கவச அலங்காரத்தில் மூலவர் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்த நிலையில், நேற்று முருகப்பெருமானுக்கு விஷே தினமான கிருத்திகை மற்றும் விடுமுறை தினம் என்பதால் ஆந்திர, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் வந்தும், அலகு குத்தியும் மூலவரை தரிசித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

அதிகளவு பக்தர்கள் திரண்டதால் பொது வழியில், மூலவரை தரிசிக்க 3 மணி நேரமும், ரூ.100 சிறப்பு தரிசன கட்டணத்தில் 1 மணி நேரமும் பக்தர்கள் நீண்ட வரிசையில் கொளுத்தும் வெயிலில் காத்திருந்து முருகப்பெருமானை வழிப்பட்னர்.

கோவிலுக்கு வந்தவர்களின் வாகனங்கள் மலைப்பாதையில் ஒரே நேரத்தில் திரண்டதால் மலைபாதை, மற்றும் கோவிலுக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்