< Back
மாநில செய்திகள்
பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

தினத்தந்தி
|
30 Sept 2023 11:19 PM IST

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

2-வது சனிக்கிழமை

வைணவ கடவுளான பெருமாளுக்கு புரட்டாசி மாதம் உகந்தமாதமாகும். இந்த மாதத்தில் சனிக்கிழமைகள் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நிலையில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சிறப்பு அலங்காரத்தில் பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் சாமி தரிசனம்

இதேபோல புதுக்கோட்டை கீழ 3-ம் வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நகரப்பகுதியில் விட்டோபா பெருமாள் கோவில் உள்பட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கீரனூர், திருமயம்

கீரனூர் அருகே களமாவூர் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில், மலையடிப்பட்டி கண் திறந்த பெருமாள் கோவில், குளத்தூர் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமயத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சத்தியமூர்த்தி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்