< Back
மாநில செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

தினத்தந்தி
|
14 Jun 2022 5:29 PM IST

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலை சுற்றும் பாதையில் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போதும், சித்ரா பவுர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 8.20 மணியளவில் தொடங்கி இன்று மாலை 5.55 மணியளவில் நிறைவடைந்தது.

பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இரவில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக கிரிவலப்பாதையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கிரிவலப் பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். மேலும் பாதுகாப்பு பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நீண்ட வரிசையில் பக்தர்கள்

தொடர்ந்து 2-ம் நாளாக இன்று பகலிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

பகலில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். சிலர் குடை பிடித்தபடியும் கிரிவலம் சென்றனர்.

மேலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பொது மற்றும் கட்டண தரிசனம் வழியிலும், கோவிலுக்குள் மட்டுமின்றி கோவிலுக்கு வெளியிலும் சாலை வரை பக்தர்கள் கூட்டம் நீண்டு காணப்பட்டது.

பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்கள் எந்தவித இடையூறும் இன்றி செல்ல போக்குவரத்து துறை மூலம் பஸ் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்