< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை - புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
|11 Sept 2022 7:55 PM IST
வார விடுமுறை மற்றும் ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிறு என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தஞ்சை,
தஞ்சையில் உள்ள பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இன்று ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி மூலவர் அம்மனுக்கு ரத்தின அங்கி சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
பல்வேறு ஊர்களில் இருந்து கோவிலுக்கு இன்று வருகை தந்த பக்தர்கள் மாவிலக்கு போட்டும், முடிகாணிக்கை செலுத்தியும் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர். இன்று வார விடுமுறை என்பதாலும், ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிறு என்பதாலும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து நீண்ட விரிசைகளில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.