திண்டுக்கல்
பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
|நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மாரியம்மன் கோவில் திருவிழா
நிலக்கோட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலில், பங்குனி மாத உற்சவ திருவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடந்த 2-ந்தேதி இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் அமர்ந்து வீதி உலா வந்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை கோவில் மண்டகப்படியில் அம்மன் அமர்ந்திருந்தார். அப்போது தீச்சட்டி, பால்குடம், கரும்புத்தொட்டில், மாவிளக்கு, பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பால்குடம் எடுத்து ஊர்வலம்
இந்தநிலையில் நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைேமாதியது. நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் குவிந்தனர். இவர்கள், பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதேபோல் மேளதாளம் முழங்க பக்தி பரவத்துடன் சில பக்தர்கள், தீச்சட்டி ஏந்தியபடி ஊர்வலமாக வந்து வழிபாடு செய்தனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை நிலக்கோட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் சுசீந்திரன், காரியதரிசிகள் பாண்டியராஜன், ஜெயபாண்டியன், சுரேஷ்பாபு, கருமலை பாண்டியன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.