< Back
மாநில செய்திகள்
பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

தினத்தந்தி
|
24 May 2023 12:15 AM IST

பரமக்குடி அருகே பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

பரமக்குடி,

பரமக்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமத்தில் ஆதிசக்தி ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் உற்சவ திருவிழா நடைபெறும். அதையொட்டி முதல் நாள் கணபதி ஹோமத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு அம்மன் தினமும் அலங்காரமாகி 9 நாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அதை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி சந்தன மாரியம்மன் சக்தி மடத்தில் இருந்து அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா புறப்பாடு நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, காவடி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆதிசக்தி ராஜராஜேஸ்வரி சக்தி பீட விஜயேந்திர சுவாமிகள் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்