ராமநாதபுரம்
ராமேசுவரம் கோவிலில் சேதுமாதவ தீர்த்த தெப்பக்குளத்தில் புனித நீராடிய பக்தர்கள்
|ராமேசுவரம் கோவிலில் சேதுமாதவ தீர்த்த தெப்பக்குளத்தில் புனித நீராடிய பக்தர்கள்
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலாவதாக அக்னிதீர்த்த கடலில் நீராடி விட்டு அதன் பின்னர் கோவிலில் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளிலும் நீராடிய பின்னர் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள சேது மாதவ தீர்த்த தெப்பக்குளத்திற்கு பக்தர்கள் புனித நீராட செல்லும் பாதை மிக குறுகலாக இருந்து வந்ததால் விடுமுறை நாட்களில் பக்தர்கள் நெருக்கடிகள் சிக்கித் தவித்து வந்தனர்.இந்த நிலையில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவுப்படி ராமேசுவரம் கோவிலில் உள்ள சேது மாதவ தீர்த்த தெப்பக்குளத்திற்கு பக்தர்கள் நீராட செல்லும் பாதையை அகலப்படுத்தும் பணியானது கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாகவே நடைபெற்று வந்தது. இந்த பணியை தொடர்ந்து பக்தர்கள் சேது மாதவ தீர்த்த தெப்பக்குளத்திற்கு புனித நீராட அனுமதிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக யாத்திரை பணியாளர்கள் குடங்களில் தண்ணீரை கொண்டு சென்று அதன் மூலம் பக்தர்கள் மீது ஊற்றி வந்தனர். இதனிடையே சேது மாதவதீர்த்த தெப்பக்குளத்தை அகலப்படுத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் வழக்கம் போல் பக்தர்கள் சேது மாதவ தீர்த்த தெப்பக்குளம் வரை நடந்து வந்து புனித நீராடி சென்றனர்.