< Back
மாநில செய்திகள்
திருப்புவனத்தில் அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
சிவகங்கை
மாநில செய்திகள்

திருப்புவனத்தில் அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தினத்தந்தி
|
14 Aug 2023 12:30 AM IST

திருப்புவனத்தில் அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

திருப்புவனம்

திருப்புவனத்தில் அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

அக்னிச்சட்டி ஊர்வலம்

திருப்புவனம் கோட்டையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் 22-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆடிப்பூர விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு செவ்வாடை பக்தர்கள் சார்பில் நிர்வாகி சக்திவேல்முருகன் தலைமையில் பக்தர்கள் கஞ்சிக்கலயம், அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

முன்னதாக திருப்புவனம் புதூர் மாரியம்மன், ரேணுகாதேவி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலம் போலீஸ் லைன் தெரு, தேரடி வீதி, கீழரத வீதி, மதுரை-மண்டபம் நெடுஞ்சாலை, நரிக்குடி ரோடு, உச்சிமாகாளி அம்மன் கோவில் வீதி, சந்தை திடல், ஆற்றுப் பாலம் வழியாக வைகை வடகரையில் உள்ள கோவிலுக்கு வந்தடைந்தது.

அன்னதானம்

பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் மற்றும் செவ்வாடை தொண்டர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்