< Back
மாநில செய்திகள்
தென் கைலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் -  வானதி சீனிவாசன்
மாநில செய்திகள்

தென் கைலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் - வானதி சீனிவாசன்

தினத்தந்தி
|
6 Feb 2024 3:43 PM IST

வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என தமிழக அமைச்சர் சேகர் பாபுவுக்கு வானதி சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.

கோவை,

தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,

கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலம் தான் தென் கைலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி. இம்மலையில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் ஏழு மலைகளை தாண்டி சிவபெருமானை தரிசித்து வருகினறனர்.

தற்சமயம் பிப்ரவரி மாதம் என்பதால் பல்வேறு பகுதியிலிருந்து வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர் ஆனால், தற்பொழுது பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படாததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

எனவே பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்களை மலை ஏற அனுமதிக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் பாதுகாப்புகளையும் வனத்துறை சார்பில் அளித்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்