< Back
மாநில செய்திகள்
பெருமாள் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

பெருமாள் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
25 Sept 2022 12:15 AM IST

தூத்துக்குடி பெருமாள் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோவிலில் நேற்று சத்தியநாராயணா அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதிகாலையில், கோ பூஜையும், விஸ்பரூப தரிசனமும் நடந்தது. தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. கோவில் வளாகத்திலுள்ள பாலஆஞ்சநேயருக்கும் சிறப்பு அலங்காரங்கத்துடன் கூடிய பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு துளசி பிரசாதமாக வழங்கப்பட்டது. கோவில் முன்பு பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்