< Back
மாநில செய்திகள்
கள்ளழகர் கோவிலில் நெல், தானியங்களை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்
மதுரை
மாநில செய்திகள்

கள்ளழகர் கோவிலில் நெல், தானியங்களை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்

தினத்தந்தி
|
20 May 2022 2:36 AM IST

மதுரை அருகே உள்ள கள்ளழகர் கோவிலில் நெல், தானியங்களை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர்.

அழகர்கோவில்

மதுரை அருகே உள்ள கள்ளழகர் கோவிலில் நெல், தானியங்களை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர்.

அழகர்கோவில்

தென்திருப்பதி, திருமாலிருஞ்சோலை என்றும் போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் புனித தலமானது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலுக்கு மதுரை மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கமாக உள்ளது. இதில் பணம், வெள்ளி, தங்கம், நெல், தானிய வகைகளை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

மேலும் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் கடந்த ஆண்டு விளைந்த நெல், தானிய வகைகளை அலங்காநல்லூரை அடுத்த கோட்டை மேடு விவசாயிகள், கள்ளழகர் பெருமாளுக்கு கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தினர். இதுதவிர வருகிற ஜூன் மாதம் முல்லை பெரியாறு-வைகை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தினமும் பாசன விவசாயி விதைப்பு என்று சொல்லக் கூடிய நெல்லை ெகாண்டு வந்து காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.

காணிக்கை

பக்தர்கள் செலுத்தும் நெல் காணிக்கைகளை சரியாக தானிய கிடங்கில் சேர்க்கப்படுகிறதா என்று தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில் துணை ஆணையர் ராமசாமி நேரில் ஆய்வு செய்தார். அப்போது தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்