விருதுநகர்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு-மலையேறி சென்று பக்தர்கள் சாமி தரிசனம்
|ஆனி மாத அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் மலையேறி சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வத்திராயிருப்பு-
ஆனி மாத அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் மலையேறி சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சுந்தரமகாலிங்கம் கோவில்
மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆனி மாத அமாவாசையே முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு அதிகாலை முதல் குவிந்தனர். காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் வரிசையில் நின்று மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நடந்து சென்றனர். பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை.
மேலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் பக்தர்கள் கொண்டு செல்வதற்கு வனத்துறையினர் தடை விதிக்கப்பட்டு இருந்தனர். ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
சாமி தரிசனம்
இந்த அமாவாசை சிறப்பு பூஜையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்:-
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு மாதம் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து சாமி தரிசனம் செய்து வருகிறோம்.ஆனால் பக்தர்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் குறைவாக உள்ளதால் தாங்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். கூடுதலாக சுகாதார வளாகம் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் அமைத்து தர வேண்டும். மேலும் பக்தர்கள் தங்குவதற்கு போதுமான வசதியை ஏற்படுத்தி தர வேண்டுமென பக்தர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.